திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பலி! காதலன் வெளியிட்ட தகவல்

0
212

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பில் யுவதியின்  காதலன் சாட்சியமளித்துள்ளார்.

உயிரிழந்தவர் அடுத்த மாதம் திருமணத்திற்கு தயாரான பட்டதாரி மாணவி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். களுத்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தரையில் விழுந்து முனங்கினார். நிமேஷாவை நான் மடியில் தூக்கிக் கொண்டு உதவிக்காக கதறினேன்” என உயிரிழந்த யுவதியின் காதலனான மத்துகம எல்ல சிறிகந்துர வீதியை சேர்ந்த மதுஷ கலன்சூரிய என்ற 28 வயதான இளைஞன் தெரிவித்துள்ளார்.  

விபத்தில் உயிரிழந்த யுவதி

களுத்துறை, கொஹொலன, செருபிட்ட –  கந்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற யுவதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பலி! காதலன் வெளியிட்ட தகவல் | Young Girl Dies In Accident Lovers Wedding

களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி தீபால் சகரத்ன முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட இளைஞன், “இவர் இறந்து போன என் காதலி. தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. இவரை எனக்கு ஒன்றரை வருடங்களாகத் தெரியும்.. புகையிரதம் ஒன்றிலேயே அறிமுகமானோம். பெற்றோர் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

சம்பவத்தன்று நிமேஷாவுடன் அவர்களது வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் களுத்துறைக்கு சென்றேன். பிறகு மாலை நான்கு மணியளவில் கடற்கரைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். மாலை 6 மணியளவில் வங்கியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பணத்தை எடுத்தோம்.

திடீரென கேட்ட சத்தம்

பின்னர் பாலத்தோட்ட வீதியில் இருந்து வீட்டுக்கு வந்தோம். மீன் வாங்க நினைத்து நாகொட சந்திக்கு வந்தோம். அங்கு மீன்கள் இல்லை. அதன் பின்னர் அருகில் உள்ள சந்தியில் உள்ள மீன் கடைக்கு சென்றேன். இந்த கடை வீதியின் இடது பக்கத்தில் உள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பலி! காதலன் வெளியிட்ட தகவல் | Young Girl Dies In Accident Lovers Wedding

மீனைக் கொடுக்க நிமேஷா அதனை திறக்கத் தயாரானார். அப்போது ஒரு சத்தம் கேட்டது. வாகனம் ஒன்று மோதி இருவரும் நடு வீதி நோக்கி வீசப்பட்டோம். நான் பார்க்கும் போது நிமேஷா முனங்கினார். காதில் இருந்து இரத்தம் வந்தது. நான் அவரை என் மடியில் எடுத்துக்கொண்டு உதவிக்காக கத்தினேன்.

நிமேஷாவை சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முச்சக்கரவண்டியில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன்.  அவர் சுயநினைவில் இல்லை. ஒட்சிசன் குழாய்கள் வைக்கப்பட்டன. காயங்கள் காரணமாக நானும் வேறு அறையில் அனுமதிக்கப்பட்டேன். மறுநாள் காலை நிமேஷா இறந்துவிட்டதை அறிந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.