நடிகை ஸ்ரீதேவி தாயால் அனுபவித்த கொடுமை… பிரபல நடிகையால் அவிழ்ந்த உண்மை

0
362

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தாய் இருக்கும் போது அவருக்கு நிகழ்ந்த துயரத்தை பிரபல நடிகை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி

பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த இவர், அசால்ட்டாக பாலிவுட் படங்களை தட்டித் தூக்கினார்.

இவர் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். போனி கபூரின் இரண்டாவது மனைவியான இவர் திருமணத்தின் போது கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.

ஸ்ரீதேவி தாய் செய்த கொடுமை - sridevi mother drink habbit

திருமணம் முடிந்த பின்பு சில காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்ட இவர், பின்பு சில படங்களில் நடித்திருந்தார். பின்பு இவரது மகள் நடிகையாக நடித்துவந்த நிலையில், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் துபாய் சென்ற இவர் குளிக்கும் டப்பில் மூழ்கி கடந்த 2018ம் ஆண்டு உயிரிழந்தார்.

இவரின் மரணம் நிகழ்ந்து தற்போது 5 வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் அதில் இருக்கும் மர்மம் மட்டும் நீங்கவே இல்லை.

ஸ்ரீதேவி தாய் செய்த கொடுமை - sridevi mother drink habbit

நடிகை குட்டி பத்மினி உடைத்த உண்மை

ஸ்ரீதேவியின் மூத்த மகள் சினிமாவில் நடித்து வருவதுடன், தனது தாய் ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவை, அவர் வரைந்த ஓவியங்கள் என அவரைப் பற்றிய நினைவுகளை அவ்வப்போது போட்டோஷுட்டாக பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் சிறு வயதிலிருந்தே நெருக்கமான தோழியாக இருந்து வரும் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீ தேவி குறித்த உண்மையை பகிர்ந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆம் ஸ்ரீதேவியின் தாய் குடி பழக்கம் கொண்டவர் என்றும் தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தனது மகள் ஸ்ரீதேவி இரவில் தூங்குவதற்கு ஒயின் ஊற்றி கொடுத்து, மது பழக்கத்திற்கு ஆழாக்கினார்.

தாயின் செயலால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதேவியின் வாழ்க்கையும் இறுதியில் பாதிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி தாய் செய்த கொடுமை - sridevi mother drink habbit