நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இலங்கை நன்கொடை!

0
371

இலங்கை அரசாங்கத்தினால் துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நன்கொடையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரக்கிபே டெமெட் செகெர்சியோக்லுவிடம் கையளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவு

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துரைத்த அமைச்சர் துருக்கி மக்களுடன் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யசோஜா குணசேகர துருக்கிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடை வழங்கிய இலங்கை! | Sri Lanka Donated To Turkey Affected Earthquake