8000 கிலோ மீட்டர் பயணம் செய்து முதியவரை காணவரும் பென்குயின்!

0
237

தன் உயிரை காப்பாற்றிய ஒருவரை பார்ப்பதற்காக பென்குயின் ஒன்று 8000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து வந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஜோவா என்ற முதியவர், ஆபத்தான நிலையில் வந்த பென்குயினை காப்பாற்றியுள்ளார்.

8000 கிலோ மீட்டர் பயணம் செய்து முதியவரை காணவரும் பென்குயின்! வியப்பில் பொதுமக்கள் | Penguin Traveled 8000 Kilometers Found An Old Man

காயம் சரியாகும் வரை அதை கவனமாக பார்த்து வந்துள்ளார், சரியானவுடன் கடற்கரைக்கு சென்று விடவே அது செல்லாமல் இருந்துள்ளது.

எனவே பென்குயினை முதியவரே வளர்த்து வந்துள்ளார். ஒருநாள் அதற்கு இறகுகள் வளர தொடங்கியவுடன் சட்டென்று காணாமல் போய் உள்ளது.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அந்த முதியவரிடம், பென்குயின் மீண்டும் வருகை தராது என்று கூறியுள்ளனர்.

வெகுநாட்கள் கழித்து முதியவர் கடற்கரைக்கு சென்ற போது, அந்த பென்குயின் வந்துள்ளது.

8000 கிலோ மீட்டர் பயணம் செய்து முதியவரை காணவரும் பென்குயின்! வியப்பில் பொதுமக்கள் | Penguin Traveled 8000 Kilometers Found An Old Man

அதே போலவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் அடுத்த செப்டம்பர் மாதம் வரும்வரை அந்த பென்குயின் இவர் கூட தான் இருக்குமாம். இவ்வாறு இருப்பதால் பொதுமக்கள் எல்லாம் கண்டு வியந்துள்ளனர்.