உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் இந்த காயை சாப்பிடுங்கள்!

0
282

கோடை காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தால் நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். இதனை ஈடு செய்ய பல இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம்.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையும் வெள்ளரியில் இருக்கிறது.

வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து இருக்கிறது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல. சருமத்திற்கும் பல நன்மைகளை தருகின்றன. வெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.

வெள்ளரிக்காயில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்று பார்ப்போம் – 

உடல் எடையை குறைக்க

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். மேலும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும். வெள்ளரிக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளதால் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வேகமாய் ஜீரணிக்கும். தொப்பையை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்ய உதவி செய்யும்.

உடல் சூட்டை தணிக்க

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியை போக்கும். வெள்ளக்காயில் உள்ள நீர்ச்சத்து, உடலில் ஏற்படும் வெப்பத்தை தணித்துவிடும்.

வாய் துறுநாற்றத்திற்கு

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், வாய் துறுநாற்றம் குறையும். வாயில் துறுநாற்றம் ஏற்படுவதற்கு வயிற்று புண்ணும் ஒரு காரணமாக இருக்கும். ஆதலால், வெள்ளரிக்காயை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம்.

சருமத்திற்கு

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சருமத்தை மிளர வைக்கும். மேலும், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களால் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகளை தடுத்து நிறுத்தும்.

கண்ணை பாதுகாக்க

வெப்பம் அதிகம் ஏற்படும்போது, கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் சத்துக்கள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்க உதவி செய்யும்.