தீவிர தாக்குதலில் ரஷ்யா; குடிநீருக்காக 10 கிலோமீட்டர் வரிசையில் நிற்கும் உக்ரைன் முதியவர்கள்!

0
274

கிழக்கு உக்ரைனின் பக்முட் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பக்முட்டின் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாசிவ் யாரில் குடிநீருக்காக முதியவர்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர்.

தீவிர தாக்குதலில் இறங்கிய ரஷ்யா; குடிநீருக்காக 10 கிலோமீட்டர் வரிசையில் நிற்கும் உக்ரைன் முதியவர்கள்! | Russia Ukraine People 10 Kilometers Drinking Water

அதன்படி தங்களது வசிப்பிடங்களின் அருகே செல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் அச்சத்துடன் இருப்பதாகவும் அதேவேளை பொறுமையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஷ்யா ராணுவ நடவடிக்கையின் மையமாக இருப்பதாக உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் Serhiy Cherevatyi தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய படைகள் பாக்முட்டில் தெருச்சண்டைகள் மூலம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.