மாணவர்களின் காலையுணவு பணத்தில் கணவரின் பிறந்த நாள் கொண்டாடிய அதிபர்!

0
231

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தை அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் நிகழ்விற்கு செலவழித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதனை மதிரிகிரிய மண்டலகிரிய மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் அதிபரே இச் செயலை செய்துள்ளதாக   பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுத் திட்டத்தின் கீழ் இப்பள்ளியின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் மொத்தமாக 72,000 ரூபாய் செலவிடுகின்றதாக  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.