நாங்கள் ஒரு தவரூ செய்து விட்டோம், அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். இதுவரை அரசியல் செய்யாத கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை நாம் செய்த பெரும் தவறு என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் பண்டாரகம அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ரணிலுக்கு வாழ்த்து
கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை நாம் செய்த பெரும் தவறு என்றும், அந்தத் தவறுக்குப் பிறகு கட்சிக்குள் சுயவிமர்சனத்துக்குச் சென்று மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
அரசியல் செய்யாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம் என்றும் அவர் கூறினார்.

அதோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
