கனடா மருத்துவர் ஒருவரின் சாதனை..

0
282

கனடாவின் கல்கரி பகுதியில் மருத்துவர் ஒருவர் முதல் தடவையாக மிகவும் சிக்கலான சத்திர சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

கனடாவில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

நோயாளி சுய நினைவில் இருக்கும் போது நோயாளியின் முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர் மைக்கேல் யங் என்ற முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நீண்ட நாட்களாக முதுகு வலியினால் பாதிக்கப்பட்டிருந்த டர்பீன் என்ற நோயாளிக்கு இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

. சத்திர சிகிச்சை நடைபெற்ற போது பெரிதாக எந்த ஒரு வலியும் இருக்கவில்லை எனவும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் சிறிய வலியை தாம் உணர்ந்ததாக நோயாளி தெரிவிக்கின்றார்.

சுமார் 55 நிமிடங்கள் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின் பின்னர் 5 மணித்தியாலங்களில் குறித்த நோயாளி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சை தொடர்ந்து மறு தினமே குறித்த நோயாளி அன்றாட வேலைகளை செய்யக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளிக்கு இருதய நோயை காணப்பட்டதால் மயக்கம் அடையச் செய்து சுயநினைவற்ற நிலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்வது மிக ஆபத்தானது என கருதியதாகவும் இதனால் சுய நினைவுடனே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள தீர்மானித்ததாகவும் மருத்துவர் குறிப்பிடுகின்றார். 

மியாமி பல்கலைக்கழகத்தில் கற்ற போது இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டதாகவும் அதன் அடிப்படையில் நினைவிழக்கச் செய்யாது இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும் டொக்டர் யங் கூறுகின்றார்.