விமானத்தை தாழ்வாக இயக்கி ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்!

0
321

ஆஸ்திரேலியாவில், ரேடாரில் சிக்காத வண்னம், விமானத்தை தாழ்வாக இயக்கி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அருகிலுள்ள தீவு நாடான பப்புவா நியூ கினி-க்கு ( Papua New Guinea ), சிறிய ரக  விமானம் மூலம் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரேடாரில் சிக்காமலிருக்க, விமானத்தை மலைகளுக்கு இடையே மிகவும் தாழ்வாக கடத்தல் கும்பல் இயக்கியுள்ளது. இருந்தபோதும், எரிபொருள் நிரப்புவதற்காக, குயின்ஸ்லாந்தில் உள்ள தனியார் விமான தளத்தில் தரையிறக்கப்பட்டபோது, பொலிசார் விமானத்தை சுற்று வளைத்தனர்.

மேலும் விமானிகள் 2 பேர் உள்பட அதிலிருந்த 5 பேரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்து 125 கோடி ரூபாய் மதிப்பிலான 52 கிலோ மெத்தாம்பேட்டமைனை பறிமுதல் செய்தனர்.