புதிய சாதனை படைத்த கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ!

0
147

சர்வதேச கால்பந்து வரலாற்றில் 100 போட்டிகளில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார்.

யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி லியச்ட்டேன்ஸ்டீன் அணியை எதிர்கொண்டது.

கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான ரொனால்டோ படைத்த புதிய சாதனை! | Football Star Cristiano Ronaldo Set A New Record

இந்த போட்டியில் போர்த்துக்கலின் கேன்சலோபெர்னாடோ சில்வா தலா ஒரு கோலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மிரட்டலாக இரண்டு கோல்களும் அடித்தனர்.  

லியச்ட்டேன்ஸ்டீன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் போர்த்துக்கல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான ரொனால்டோ படைத்த புதிய சாதனை! | Football Star Cristiano Ronaldo Set A New Record

அந்த இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ புதிய வரலாற்று சாதனையைப் படைத்தார். இந்நிலையில், ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து வரலாற்றில் 100 போட்டிகளில் கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார்.

முன்னதாக கத்தார் உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.