இதுவே இறுதி வாய்ப்பு.. இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..! பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

0
223

சர்வதேச நாணய நிதியத்துடன் கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பையும் இழந்தால் இலங்கை லெபனானாக மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார்.

லெபனானின் அரசியல் தரப்பினரால் ஒருமித்த கருத்தை அடைய முடியவில்லை மற்றும் வங்கி முறையை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானிலுள்ள மக்கள் குறைந்த பட்சம் வங்கியில் இருந்து தங்கள் பணத்தை எடுக்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் சிலர் பொம்மை கைத்துப்பாக்கிகளுடன் வங்கிகளில் குதித்து தமது பணத்தை கேட்பதாகவும் கூறினார்.

இதுவே இறுதி வாய்ப்பு - இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..! | Last Chance For Sri Lanka

இது எந்தவொரு நாட்டிலும் நடக்காத விரும்பத்தகாத செயற்பாடு, இந்த நிலைமை இலங்கை தவிர்க்க வேண்டும்.

இதற்காக நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும், புத்தாக்கத்தை அதிகரிப்பதும் முக்கியமாகும். மேலும் ஏற்றுமதியை மேம்படுத்தாமல் இந்த நெருக்கடியான நிலையில் இருந்து வெளியேற முடியாது என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது பேராசிரியர் ரொஹான் சமரஜீவ இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.