இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

0
214

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி இன்றும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய விலையான 327.20 ரூபாவில் இருந்து 332.06 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது.

அதேவேளை விற்பனை விலை நேற்றைய விலையில் 346.37 ரூபாவில் இருந்து 351.51 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் 330 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 335 ரூபாவாக காணப்படுகிறது. 

இதேநேரம் விற்பனை விலை நேற்றைய தினம் 345 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள மாற்றம் | Dollar Rate Increased In Sri Lanka

இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் 332.96 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 331.48 ரூபாவாக குறைந்துள்ளது. 

அத்துடன் கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய தினம் 351.50 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 355.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.