தம்மை கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் பொலிசாரின் நோக்கமான உள்ளது என்று அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் பொறுப்பில் இருந்த போது பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்ததாக பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மீது குற்றம் சுமத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் குறித்தக் குற்றச்சாட்டை இம்ரான் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்ய பொலிசார் அவரது இல்லம் சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் இல்லத்தை முற்றுகையிட்டதுடன் பொலிசாருக்கும் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பொலிசார் வெளியேறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான் அதிகார வர்க்கம் மீண்டும் என்னை துரத்தும் என்னைக் கடத்தி படுகொலை செய்வதே அவர்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.