உக்ரைனின் போர் வியூகத்தால் அதிரப் போகும் ரஷ்யா!

0
60

நாட்டின் கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது. நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும். நாம் அதை செய்வோம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

ரஷ்யா எல்லையை அண்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலன்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் போர் யுத்தியால் கதிகலங்க போகும் ரஷ்யா! | Ukraine S War Strategy That Shocks Russia

மேலும் அவர் கூறுகையில்,

“நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது. அங்கு உக்ரைன் மக்களின் எதிர்காலமும் போராடப்படுகிறது.

உக்ரைனின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது என கூறியுள்ளார்.

உக்ரைனின் போர் யுத்தியால் கதிகலங்க போகும் ரஷ்யா! | Ukraine S War Strategy That Shocks Russia

ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற நகரைக் கைப்பற்றப் போராடி வருகிறது. மறுமுனையில் உக்ரைனும் கடுமையான ராணுவ தாக்குதலை நடத்துகிறது. மேலும் ஏற்கனவே ரஷ்யா உக்ரைனின் பக்முட் நகரின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியுள்ளது.

பக்முத்தை கைப்பற்றுவது டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளைக் கைப்பற்ற அனுமதிக்கும் என ரஷ்ய தரப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் கடந்த வாரங்களில் இரு தரப்பினருக்கும் பாரிய எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.