நாடளாவிய ரீதியில் பல சேவைகள் முடங்கியபோதும் பணிப்பகிஸ்கரிப்பை புறக்கணித்த முக்கிய சேவை!

0
98

இலங்கையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில்  பல தொழிற்சங்கங்கள்  பணிப்பகிஸ்கரிப்பை  முன்னெடுத்துவரும் நிலையில்  எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

எரிபொருள் விநியோகம்

இந்த நிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முறையத்தின் தலைவர் எம். யூ. மொஹமட் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல சேவைகள் முடங்கியபோதும் பணிப்பகிஸ்கரிப்பை புறக்கணித்த முக்கிய சேவை! | Ignored The Protest Ceylon Petroleum Corporation

தற்போது, ​​6,600 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் இருப்பை கொண்ட 300 பௌசர்கள் வழக்கமான எரிபொருள் விநியோகத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.