சந்திரிக்காவின் மேடையில் டேனிஸ் அலி! சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ(Video)

0
227

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் தான் கேட்ட இரு கேள்விகளுக்கு பதில் கிடைத்ததாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான டேனிஸ் அலி தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் மேடையொன்றில் டேனிஸ் அலி காணப்பட்ட புகைப்படம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

video source from Lanka sri

அவர் மேலும் தெரிவிக்கையில், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மேடைக்கு நான் ஏறுவதற்கு முன் அவருடன் நான் கலந்துரையாடிய போது இரு விடங்களை அவரிடம் கேட்டேன். ஒன்று காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயல்திட்டமொன்றை வெளியிட்டிருந்தோம்.

கோட்டாபய, ரணில் வெளியேற வேண்டும், இடைக்கால அரசாங்கமொன்று வர வேண்டும், ஒரு வருடத்தில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் போன்ற விடயங்கள். இந்த விடயத்தை செய்து கொண்டு முன்னோக்கி செல்ல விருப்பமா என வினவினேன்.

அடுத்ததாக நீங்கள் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்தவர்கள். இந்த நிலையில் உங்களது பிள்ளையை அரசியலுக்குள் கொண்டு வர போகின்றீர்களா என கேட்டேன். இந்த இரு கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைத்தது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களது கட்சியான இலங்கை சோசலிச கட்சிக்கு நான் கூறியிருந்தேன் இவ்வாறு சந்திரிக்காவின் கூட்டமொன்றுக்கு செல்வதாக. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் சிலர் சமூக வலைத்தங்களில், நான் அந்த கூட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டு சந்திரிக்காவின் முயல் சின்னத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ரணிலை விரட்ட வேண்டும், புதிய யாப்பொன்றை உருவாக்க வேண்டும் இந்த விடயங்களை செய்ய எம்மால் இணைய முடிந்த அனைத்து இடங்களுடனும் இணைய வேண்டும். மாற்றத்தை உருவாக்க நாம் இதனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.