படகு கவிழ்ந்ததில் குளத்தில் 6 பேர் மூழ்கி பலி… ஆந்திர மாநிலத்தில் சம்பவம்…!

0
85

ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் சதுப்பு நிலக் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படகு கவிழ்ந்ததில் 6 பேர் நீரில் மூழ்கி பலி

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தோடேரு கிராமத்தில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததில் 6 பேர் சதுப்பு நிலக் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று ஒரு படகில் 10 பேர் தோடேரு கிராமத்தில் சதுப்பு நிலக் குளத்தில் சென்றனர். குளத்தின் பாதுகாவலருக்கு தெரியாமல் படகை எடுத்துச் சென்றுள்ளனர். மீன்களுக்கு உணவளிக்க பயன்படுத்தப்படும் இரும்பினால் செய்யப்பட்ட நாட்டுப்படகில் இந்த 10 பேரும் குளத்துக்குள் சென்றுள்ளனர்.

யு-டர்ன் எடுக்க முயன்றபோது படகு கவிழ்ந்த போது, அனைவரும் தண்ணீரில் குதித்தனர். ஆனால் குளம் சேறும் சகதியுமாக இருந்ததால், 6 பேர் தண்ணீருக்கு அடியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் அல்லி ஸ்ரீநாத் (18), பிரசாந்த் (28), ரகு (24), பாலாஜி (18), கல்யாண் (25), மற்றும் சுரேந்திரா (18) என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.