இந்தியாவில் கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை கடுமையாக பாதித்திருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது.
தற்போது அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்தியாவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரையும் உள்ளே சேர்க்கவில்லை
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் சுஜன் மாஜி மற்றும் முன்முன் மாஜி தம்பதி ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளனர். கொரோனா தொற்றின் போது தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்முன் மாஜி மிக தீவிரமாக கடைபிடித்துள்ளார்.
எனினும் கொரோனா பரவல் முடிந்து இயல்புநிலை திரும்பி இருந்தாலும் மாஜி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கணவர் சுஜன் தன்னுடைய மனைவியிடம் பலமுறை கூறியும் பயனளிக்கவும் இல்லை.

நாட்கள் செல்ல செல்ல அவர் சரியாகி விடுவார் என்றும் சுஜன் கருதி வந்த சூழலில் அலுவலகம் சென்று வந்த சுஜனையும் வீட்டுக்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு தன்னுடைய மகனுடன் முன்முன் வாழ்ந்து வந்த சூழலில் வேறு வழியில்லாமல் அவரது வீட்டுக்கு அருகே சுஜன் வாடகை வீடு ஒன்றையும் எடுத்து தங்கி வந்துள்ளார்.
சுஜன் மனைவி மற்றும் மகனுக்காக காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வீட்டு கதவருகே வைத்து விட்டு அவர்களுடன் வீடியோ கால் மூலமாகவும் அவர் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் முடியாமல் போக சுஜன். பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிஸார் வந்தபோதும் மாஜி கதவைத் திறக்கவில்லை.
இதனையடுத்து வேறு வழியின்றி பொலிஸார் கதவை உடைத்துச் சென்று அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுள்ளார்கள்.
