ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்த பிரிட்டன்!

0
272

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா மீது இங்கிலாந்து மேலும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி போர்களத்தில் மொஸ்கோ பயன்படுத்திய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இந்நிலையில் குறித்த தடை தொகுப்பில் விமானப்பாகங்கள், ரேடியோ உபகரணங்கள், மின்னணு இராணுவ பாகங்கள் போன்ற நூற்றுக்கணக்கான பொருட்கள் உள்ளடங்குகின்றன.

அதேநேரம் ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோஸ்டடோம் உடன் இணைக்கப்பட்ட 92 தனிநபர்களும் தடை பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுள் அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர்கள். நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்களின் தலைமை நிர்வாகி, நான்கு வங்கிகள், இரண்டு பெரிய பாதுகாப்பு நிறுவனங்களின் முதலாலிகளும் உள்ளடங்குகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ், ரஷ்யா போர்களத்தில் பயன்படுத்தும் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உறுதியளிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.