ஒரு மாதமாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்; காட்சிப்பொருளான பேருந்து!

0
240

கடந்த 20ம் திகதி நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இவ் விபத்தில் பலத்த சேதமடைந்த பஸ்ஸினை ஒரு மாதமாகியும் அதிகாரிகள் அதனை கற்ற நடவடிக்கை எடுக்காததால் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரில் வீதியோரம் காட்சி பொருளாக உள்ளது.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடுதலாக சென்றுவரும் நகரமாகும்.

காட்சிப்பொருளான பேருந்து

ஒரு மாதமாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்; காட்சிப்பொருளான பேருந்து!(Photos) | Officials Who Have Not Been Seen For A Month

அதோடு நுவரெலியா பகுதிக்கான புகையிரத சேவையின் மத்திய நிலையமாகவும் நானுஓயா நகரம் காணப்படுவதால் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது போல் கையடக்க தொலைபேசியிலும் , கமெரா மூலமும் பஸ்ஸினை படம் பிடித்து பலர் செல்கின்றனர்.

அதேசமயம் வீதியோரம் அகற்றப்படாமல் இருக்கும் பஸ்ஸினால் ஏனைய வாகன சாரதிகளிடையே விபத்து பீதியை ஏற்படுத்தி வருகிறது என தெரிவிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கபப்ட்டுள்ளது.