மோடியை உடனே சந்திக்க வேண்டும்! கூட்டமைப்பு கோரிக்கை 

0
241

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) உடனடியாக சந்திக்க வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர்.

யாழிற்கு விஜயம் செய்துள்ள இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையில் இராப்போசன விருந்துபசாரமொன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மோடியை உடனடியாக சந்திக்கவேண்டும்! கோரிக்கை விடுத்த கூட்டமைப்பு | Must Meet Modi Immediately Requesting Federation

இதன்போது, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணை அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலையிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மோடியை உடனடியாக சந்திக்கவேண்டும்! கோரிக்கை விடுத்த கூட்டமைப்பு | Must Meet Modi Immediately Requesting Federation

ஆனால் தற்போது இலங்கையில் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

இதேவேளை, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 1987ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதையடுத்து அரசியமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்திற்கும் தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற அதன் வடிவங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக இந்திய இணை அமைச்சரிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.