துருக்கிய குழந்தை “ஆயா”க்காக மக்கள் போட்டி; மருத்துவமனை மேலாளர் அதிரடி!

0
278

தொப்புள் கொடி கூட அறுபடாமல் துருக்கி நிலநடுக்கத்தில் மீட்கப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டிவரும் நிலையில் குழந்தையை தற்போதைக்கு யாருக்கும் தத்து கொடுக்க போவதில்லை என மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் காலித் அட்டாயா தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் உருகுலைந்து போன துருக்கி, சிரியா நாட்டு மக்களுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி அரவணைத்து வருகிறது. நிலநடுக்கத்தின் போது நிறைமாத கர்பிணி ஒருவர் பெண் குழந்தையை பிரசவித்து உயிரிழந்துள்ளார்.

துருக்கி குழந்தை ”அயா” க்காக போட்டிபோடும் மக்கள்; மருத்துவமனையின் மேலாளர் அதிரடி ! | People Competing For Turkish Baby Aya

தொப்புள் கொடி கூட அறுபடாமல் அந்த குழந்தை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இக்குழந்தையின் தந்தை, தாய் உடன் பிறந்த நான்கு பேரும் நிலநடுக்கத்தில் பலியான நிலையில் பச்சிளம் குழந்தையை மட்டும் தூரத்து உறவினர் மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளார்.

 யாருக்கும் கிடையாது 

பேரிடரில் பூத்த இந்த குழந்தைக்கு மருத்துவமனையில் அயா என்று பேர் வைத்து அனைவரும் ஆசையுடன் அழைத்து வருகின்றனர். அயா என்றால் அரபியில் அதிசயம் என்று பொருள்.

மீட்கப்பட்ட இந்த குழந்தையின் செய்தி சமூகவலைத்தளம் மூலம் உலகெங்கும் பரவிய நிலையில் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.

குவைத்தை சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் உள்ளிட்ட பலரும் குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் காலித் அட்டாயா குழந்தையை தற்போதைக்கு யாருக்கும் தத்து கொடுக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கி குழந்தை ”அயா” க்காக போட்டிபோடும் மக்கள்; மருத்துவமனையின் மேலாளர் அதிரடி ! | People Competing For Turkish Baby Aya

அதோடு குழந்தை அயாவின் உறவுக்காரர்கள் யாரவது திரும்பி வரும் வரை இந்த குழந்தையை என் சொத்த குழந்தை போல வளர்க்க போகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் காலித் மற்றும் அவரது மனைவிக்கு ஐந்து மாதத்திற்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. தான் பெற்ற குழந்தையுடன் அயாவுக்கும் மருத்துவரின் மனைவிதான் தாய் பால் கொடுத்து பேணி பராமரித்து வருகிறார்.

அதேவேளை துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.