பூண்டு பாரம்பரிய சமையலில் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாகும்.
பூண்டை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக பூண்டு உங்களுடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது என்று சொல்லப்படுகிறது இதனை தினமும் கஷாயம் வடிவில் எடுத்து கொள்வது இன்னும் சிறப்பே.
அந்தவகையில் தற்போது பூண்டை வைத்து செய்யக்கூடிய கஷாயம் எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- பூண்டு – 1 கப்
- இஞ்சி – 1 கப்
- ஆப்பிள் சிடார்
- வினிகர் – 1 கப்
- எலுமிச்சை சாறு – 1 கப்
- தேன் – 2 கப்
செய்முறை
- பூண்டை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். .இதை மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சியைத் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் இஞ்சி சாறு ஒரு கப், பூண்டு சாறு ஒரு கப், ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு கப், எலுமிச்சை சாறு ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- இதை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட்டு சுண்ட வைக்க வேண்டும். மொத்தமுள்ள 4 கப் இரண்டு கப்பாக குறையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். இரண்டு கப்பாக சுண்டியபின் அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆறிவிடுங்கள்.
- பின் இரண்டு கப் அளவுக்கு தேன் சேர்த்து நன்றாகக் கலந்து பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இதை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்துங்கள்.
- இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு மாதம் தொடர்ச்சியாக சாப்பிட்ட பின் நிச்சயம் உங்களுடைய எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு நன்றாகக் குறைந்திருப்பதை பார்க்க முடியும்.
