ஒரு கோல் கேட்ட காதலி..நான்கு கோல்கள் அடித்த ரொனால்டோ..கொண்டாடும் ரசிகர்கள்(வீடியோ)

0
438

நேற்றைய அல் வெஹ்தா போட்டிக்கு முன்பாக காதலி ஜார்ஜினா வாழ்த்தியபடியே ரொனால்டோ கோல்கள் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

500 கோல் அடித்த ரொனால்டோ

சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அல் வெஹ்தா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அல் நஸர் தரப்பில் அடிக்கப்பட்ட 4 கோல்களும் ரொனால்டோ அடித்தது தான்.

மேலும் அவர் 500 கிளப் கோல்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இந்த வெற்றியின் மூலம் அல் நஸர் 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

காதலியின் பதிவு

முன்னதாக, ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா இன்றைய (நேற்று) போட்டியில் நீங்கள் கோல் அடிக்க வேண்டும் என்று வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார்.

அவரது பதிவில், ‘இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகவும், உங்கள் அணிக்காக ஒரு கோல் அடிக்கவும் வாழ்த்துகிறேன்! நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நான் அதை மிகவும் விரும்புகிறேன்’ என கூறியிருந்தார். அவர் ஒரு கோல் அடிக்க வாழ்த்தியிருந்தார். ஆனால் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து மிரள வைத்தார்.