அடுத்தது இந்தியா: துருக்கியில் நிலநடுக்கத்தை கணித்த ஆய்வாளர் க்ஷக் தகவல்!

0
407

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை உலகை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் துருக்கி நிலநடுக்கம் ஏற்படப்போவதை மூன்று நாட்களின் முன்னரே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

அடுத்தது இந்தியா? துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆய்வாளர் க்ஷாக் தகவல்! | Analyst Predicted Earthquake In Turkey India Next

இந்தியாவிலும் இதேபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் நிலநடுக்கங்களின் தாக்கம் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்து இருக்கிறனர்.

ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் இடிந்தும் நகரங்கள் உருக்குலைந்தும் காணப்படுகின்றன.

அடுத்தது இந்தியா? துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆய்வாளர் க்ஷாக் தகவல்! | Analyst Predicted Earthquake In Turkey India Next

இந்த நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியே இப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என துல்லியமாக கணித்து உள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல்

SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கி நிலநடுக்க கணிப்பு அதில்,

“கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும்.” என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனால், அதை அப்போது பலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் துர்க்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ட்விட்டரில் மீண்டும் ஃப்ரான்க் பதிவிட்டு இருக்கிறார். “மத்திய துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் என் மனம் இருக்கிறது.

அடுத்தது இந்தியா? துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆய்வாளர் க்ஷாக் தகவல்! | Analyst Predicted Earthquake In Turkey India Next

115 மற்றும் 526 வது ஆண்டுகளை போல் இப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன்.” என்று பதிவிட்டு இருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையிலேயே , “ஒரு பெரும் அளவிலான நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக வந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எனினும் அது எப்போது ஏற்படும் என்பதை ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் குறிப்பிடவில்லை.