இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சை கருத்து: விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான் 

0
306

இஸ்லாமிய மதத்திற்கு கடவுளுக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் விக்கிப்பீடியாவில் இடம்பெற்று வருவதாக பாகிஸ்தான்  அரசாங்கம் அதனை முடக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மதநிந்தனையில் ஈடுபட்டதாக பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சை கருத்து: விக்கிப்பீடியாவை முடக்கிய நாடு | Comments Against Islam Blocked Wikipedia Pakistan

இதனிடையே, இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மதநிந்தனை தொடர்பான அந்த கருத்துக்களை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது.

ஆனால், விக்கிப்பீடியா எந்த கருத்துக்களையும் நீக்கவில்லை.

இந்த நிலையில் மதம், கடவுளை அவமதிக்கும் வகையிலான மத நிந்தனை கருத்துக்களை அவதூறு கருத்துக்கள் நீக்கப்படாததையடுத்து விக்கிப்பீடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசாங்கம் முடக்கியுள்ளது.

மதநிந்தனை கருத்துக்கள், கடவுள், மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.