20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் அமெரிக்க பெண்!

0
294

அமெரிக்காவில் 20 வருடங்களாக மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை அமெரிக்க பெண் ஒருவர் கொண்டுள்ளார். உணவு விடயத்தில் நம்மில் பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கும். சிலேட் குச்சி, விபூதி போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.

அதுவும், 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அவர் அடிமையாகி உள்ளாராம்.

25 வயதான ஜெனிபர் என்கிற அந்த பெண் பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘என் விசித்திரமான போதை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பின்னரே அவரின் இந்த வினோத பழக்கம் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறது.

தனது 5 வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும் முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறுகிறார்.

நாட்கள் செல்லசெல்ல பழக்கம் மோசமானதே தவிர அதனை விட்டொழிக்க முடியவில்லை என்றும் தற்போது ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சமயம் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்தாரம் ஜெனிபர்.

20 ஆண்டுகளாக மொத்தைகளை உண்ணும் அமெரிக்க பெண்! | Us Woman Has Been Eating Junk Food For 20 Years

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால் மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால் எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.