தமிழ்நாட்டில் சமுத்திரா குடும்ப உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை சாப்பிட்ட நாய்!

0
489

தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல குடும்ப உணவகமான சமுத்திரா உணவகத்தில் சிக்கனை நாய் சாப்பிடும் காணொளி வெளியானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் பிரபல தனியார் குடும்ப உணவகமான சமுத்திரா 4க்கும் அதிகமான கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இதில் ஜார்ஜ் ரோட்டில் இயங்கி வரும் கிளையின் வெளியே ஷவர்மா தயார் செய்வதற்கான சிக்கனை ஊழியர்கள் வேக வைத்துள்ளனர்.

அப்போது ஷவர்மா தயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கவனக்குறைவாக உணவக நிர்வாகம் செயல்பட்டுள்ளது.

அந்த வழியாக சென்ற தெரு நாய் ஒன்று அங்கிருந்த அந்த ஷவர்மாவை சாப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கும் ஷவர்மாவை நாய் சாப்பிடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜார்ஜ் சாலையில் உள்ள குடும்ப உணவகமான சமுத்திராவிற்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், உணவு டோர் டெலிவரி மற்றும் வாடிக்கையாளருக்கு வழங்க சொமேட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனங்களுடன் இந்த உணவகம் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல குடும்ப உணவகம் நாய் உணவகமாக மாறியது தூத்துக்குடி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.