நிம்மதியான தூக்கம் ஏற்பட இந்த வழிகளை கடைப்பிடியுங்கள்..

0
420
Happy woman sleeping in the bed in the night at home

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் என அனைத்திற்கும் தூக்கம் என்பது ஆரோக்கியமாக வாழ இன்றியமையாததாக இருக்கின்றது.

மனிதனுக்கு தூக்கம் அவசியம்

ஆம் ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தூக்கமில்லாமல் தவிர்ப்பவர்களின் நிலைமை பல நோய்களால் அவதிப்படு் நிலைக்கு சென்றுள்ள்ளார்.

அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு காபி தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

டிவி பார்ப்பது கேம்ஸ் விளையாடுவது ஆகியவற்றையும் படுக்கும் முன் தவிர்க்க வேண்டும். நன்றாக தூக்கம் வருவதற்கு சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

படுக்கையில் படுத்து கொண்டு டிவி பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தால் தூக்கம் வராது. எனவே தூக்கம் வரும் போது படுக்கையில் படுக்க வேண்டும்

படுக்கை அறையில் முடிந்தவரை வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். குறைவான வெளிச்சம் இருந்தால் நல்லது

படுக்கையறையை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டால் தூக்கம் கண்டிப்பாக வரும். மனதை அலைபாய விடாமல் நிம்மதியான தூக்கம் ஏற்பட மேற்கண்ட வழிகளை கடைபிடித்து பாருங்கள்