மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

0
597

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது 20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன. முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெறுகிறது.

மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி | Womens Cricket World Cup Final

16 அணிகள் பங்குபற்றி இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூ ஸிலாந்தை இந்தியா 8 விக்கெட்களால் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களைப் பெற்றது.