தினம் ஒரு டம்ளர் கொத்தமல்லி ஜூஸ்! மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..

0
559

பொதுவாக நாம் அன்றாடம் உணவில் மணம் மற்றும் சுவைக்காக சேர்த்துக் கொள்ள கூடிய ஒரு மூலிகை தான் கொத்தமல்லி இலை.

இது சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு பல விதமான நன்மைகளையும் தரக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்ததுமாகும்.

கொத்தமல்லி தழையில் விட்டமின் ஏ, பி, சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. மனித்தனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது.

இதனை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வருவது இன்னும் நன்மையே தரும். 

அந்தவகையில் தற்போது இந்த ஜூஸ் தயாரிக்கும் முறை மற்றும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

தினமும் ஒரு டம்ளர் கொத்தமல்லி ஜூஸ் குடிச்சு பாருங்க! இந்த நோய் பறந்து ஓடிவிடுமாம் | Glass Of Coriander Juice To Your Daily Diet

ஜூஸ் தயாரிக்கும் முறை

 • கொத்தமல்லியை நீரில் நன்கு கழுவி, சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
 • பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும்
 • குளிர்ந்த பின் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கொத்தமல்லி ஜூஸ் தயார். 

 நன்மைகள்

 • கொத்தமல்லி ஜூஸ் து எக்ஸிமா, வறட்சி மற்றும் பூஞ்சை நோய்கள் போன்ற பல தீவிர சரும பிரச்சனைகளைத் தடுக்கும். 
 •  கொத்தமல்லியில் உள்ள ஏராளமான அத்தியாவசிய எணணெய்கள், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்.
 • இரத்த சோகை இருப்பவர்கள் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது நல்லது. 
 • கொத்தமல்லி ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 
 • கொத்தமல்லியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மற்ற மூலக்கூறுகள் ஆக்ஸிஜனேற்றமடைவதைத் தடுத்து, பல்வேறு நோய்களின் தாக்கத்தையும் தடுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்.  
 • அஜீரண பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்கள் இந்த ஜூஸை தினமும் சிறிது குடித்தால், அதில் இருந்து முற்றிலும் விடுபடலாம். 
 •   கொத்தமல்லி எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும். 
 • கொத்தமல்லி ஜூஸை தினமும் சிறிது குடித்து வந்தால் வாய்ப்புண்ணை சரிசெய்ய உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வாயை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். 
 •  தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால், அடிக்கடி வரும் பசி உணர்வைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
 •  கொத்தமல்லியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தடுத்து, சீராக பராமரிக்க உதவும். மேலும் பெண்கள் இதை தினமும் சிறிது குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.