நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தம்மிக பிரசாத்துக்கு வாய்ப்பு

0
416

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத், நேபாள கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

40 வயதான அவர் ஏற்கனவே நேபாளம் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து அண்மையில் நேர்காணலில் பங்குபற்றினார். தற்போது இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படக்கூடிய 5 பேரில் அவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.