முடிவை எடுத்துவிட்டு ஏன் நாடகமாடுகின்றீர்கள்..! சுமந்திரனை நோக்கி அடைக்கலநாதன் கேள்வி

0
244

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் – தனித்து – பிரிந்து கேட்பது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முடிவெடுத்துவிட்டு இப்போது வந்து ஏன் நாடகமாடுகின்றீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நோக்கி ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (11.01.2023) இடம்பெற்றிருந்தது.

சுமந்திரனின் கருத்து

இதில் வைத்து அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என்றால், ஒவ்வொரு சபைகளின் ஒதுக்கீடுகள் தொடர்பில் வட்டாரக் கிளைகள், மாவட்டக் கிளைகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளார்.