பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு! மாணவர்கள் மயக்கம்..

0
60

பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தின் மயூரேஸ்வர் பகுதியில் ஆரம்பப்பாடசாலையில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 மதிய உணவு

பாடசாலையில் நேற்றுமுன்தினம் (ஜன 09) மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், சுமார் 30 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். அதனையடுத்து மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Snake In Food Served To School Children

அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியா நிலையில் ஒரு மாணவர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ள்ளதாக கூறப்படுகின்றது .

இதனிடையே, தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர் இருசக்கர வாகனத்தில் வந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரை தடுத்து நிறுத்தி, அவருடைய வாகனத்தை அடித்து நொறுக்கியதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.