பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கு 3 மனைவிகள் மற்றும் 60 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மூன்று மனைவிகள், 60 குழந்தைகள்
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) குவெட்டா மாகாணத்தில் தனது மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சர்தார் ஜானின் மூன்று மனைவிகளில் ஒருவருக்கு இந்த வாரம் குஷால் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்காவது திருமணம்
மூன்று மனைவிகள் மற்றும் 60 குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக மருத்துவராக இருக்கும் 50 வயதுடைய சர்தார், தனக்கு இருக்கும் குழந்தைகளின் அளவை குறித்து தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருகிறார்.
மேலும் தனக்கு இன்னும் அதிகமான குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இன்னொரு மனைவி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதாக புகார் கூறிய சர்தார், தனது முழு குடும்பத்தையும் வெளியூருக்கு அழைத்துச் செல்ல இலவச பேருந்து வழங்குமாறு உள்ளூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பலதார திருமண முறைக்கு அனுமதி இருக்கும் நிலையில் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தார் ஜான் ஷம்ஷாத் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “வணிகம் ஸ்தம்பித்துள்ளது, “மாவு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.”
“கடந்த மூன்று ஆண்டுகளாக, நான் உட்பட உலகம் முழுவதும் அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.