என் மனைவி அப்பாவி தான்! ஆனால்… தற்கொலைக்கு முன் சமையல்காரர் சொன்ன வார்த்தைகள்

0
104

இந்தியாவில் சமையல்காரராக பணிபுரியும் நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனது மரணத்திற்கு காரணம் மனைவியின் குடும்பத்தார் தான் என இறப்பதற்கு முன் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் டாங்க். சமையல்காரராக உள்ளார். இவரும் ரூபம் என்ற இளம்பெண்ணும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ரூபம் சார்ட்டட் அக்கவுண்டண்டாக இருக்கிறார். தம்பதிக்கு பண விடயத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வசதியாக இருந்தனர். இந்த நிலையில் ரூபம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோர் வீட்டிற்கு திடீரென சென்ற நிலையில் முகேஷ் பல முறை அழைத்தும் திரும்பி வரவில்லை.

விசாரணை 

இதனால் மனமுடைந்த முகேஷ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் இரண்டு வீடியோவை பதிவிட்டதோடு ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதில், என் மனைவி அப்பாவி! ஆனால் அவரின் குடும்பத்தார் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள், அவர்கள் தான் தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ரூபம் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.