மார்ஃபிங் புகைப்படங்களை வெளியிட்டதால் ஆண் ஒருவரை 59 பெண்கள் சேர்ந்து சரமாரி தாக்குதல்

0
55

திருச்சூரில் மாவட்டத்தில் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படும் நபர் மீது 59 பெண்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் தாக்குதல்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முரியாட்டை சேர்ந்த ஷாஜி என்பவர் சமீபத்தில் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஷாஜி மீது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஷாஜி தனது மனைவி ஆஷ்லின், மகன் சாஜன் ஆகியோருடன் காரில் வருவதை பார்த்த எம்பரர் இம்மானுவேல் ரிட்ரீட் மையத்தின் பெண் உறுப்பினர்கள் 59 பேர், காரை மறித்து ஷாஜி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஷாஜியின் மகன் மற்றும் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

11 பெண்கள் கைது

காரை மறித்து ஷாஜி மீது தாக்குதல் நடத்திய 59 பெண்களில் 11 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

59 பெண்கள் சேர்ந்து ஆண் ஒருவரை…மார்ஃபிங் புகைப்படங்களை வெளியிட்டதால் சரமாரி தாக்குதல் | 59 Women Assaulting One Man In Kerala

இது குறித்து திருச்சூர் மாவட்டம் ஆளூர் பொலிஸார் பேசிய போது, ஒரு பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷாஜி பரப்பியதால் அவர் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.