உலகநாடுகளுக்கு அபாய சங்கு ஊதிய IMF!

0
260

கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டு முழு உலகுக்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள்

உக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகநாடுகளுக்கு அபாய சங்கு ஊதிய IMF! | World Countries Pay The Risk Of The Imf

இதன் காரணமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

மறுபக்கம் உக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான காரணிகளால், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.