சானிட்டரி நாப்கின்களின் விலை குறைக்கப்படவில்லை! கீதா குமாரசிங்க

0
213

உள்நாட்டு சானிட்டரி நாப்கின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மைக்காலமாக நடவடிக்கை எடுத்த போதிலும் இதுவரை சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை

மூலப்பொருள் விலை உயர்வுக்கு முன்னும் வரிக்கு முன்னும் ஆறு சானிட்டரி நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது.  

ஆனால் தற்போது ஒரு பாக்கெட் ஐநூறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

சானிட்டரி நாப்கின்களின் விலை குறைக்கப்படவில்லை | Price Of Sanitary Napkins Has Not Been Reduced

வரி நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாதது தொடர்பில் வினவிய போது ​​வரிகள் நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி விலை குறைக்கப்படாதது குறித்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.