ஜொலிக்க தொடங்கியுள்ள லண்டன் நகர வீதிகள்…

0
326

ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் அதற்கான முன்னெற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கட்டிட அலங்காரங்கள், ஆடல்பாடல் கச்சேரிகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள், சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ஜொலிக்கும் நகர வீதிகள் என லண்டன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக்கோலம் கொண்டுள்ளது.

வீதிக்கு நடுவே சிறகுகளை விரித்தபடி தேவதை பறப்பது போல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

லண்டனில் வழக்கத்திற்குமாறாக இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 20 முக்கிய கடை வீதிகள் ஜொலிக்க தொடங்கியுள்ளன. அந்தரத்தில் நட்சத்திரங்கள், மின்னும் கட்டிட சுவர்கள் என ஒவ்வொரு பகுதியும் புதுமையான வேலைபாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.