போராட்டத்தின் ஊடாக மற்றுமோர் ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை!..ஜனாதிபதி திட்டவட்டம்

0
356

இலங்கையில் போராட்டத்தின் ஊடாக மற்றுமோர் ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ இனியும் ஆட்சி மாற்றம் செய்வதற்காகப் போராட்டத்தில் யாரும் ஈடுபடுவார்களாயின், இராணுவத்தினரை பயன்படுத்தி அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஆட்சிமாற்றத்திற்கு ஒருபோதும் இடமில்லை; சீறிய ஜனாதிபதி ரணில்!(Video) | There Is Never Room For A Coup

விசாரணை குழு அமைக்கப்படும்

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டமை வன்முறை செயல் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு தீ வைப்பதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள்? தீ வைத்தவர்களின் பின்னால் யார் செயற்பட்டார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

தற்போது என்னை ஹிட்லர் என விமர்சிக்கின்றதாக கூறிவ ஜனாதிபதி, , ஆனால் அனுமதி பெற்று போராட்டம் நடத்துங்கள், அதற்கு தடையில்லை. போராட்டம் மூலம் ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை. கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை பஸில் இரட்டை குடியுரிமை உடையவர் என விமர்சிக்கின்றனர். பஸிலைபோல முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னமும் இரட்டை குடியுரிமை உடையவர்தான் எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

https://youtube.com/watch?v=soBgxrph9tw%3Fstart%3D8
https://youtu.be/soBgxrph9tw