நோர்வேயில் இலங்கையரை மோசடி செய்த யாழ் பெண்கள்!

0
175

போலி வங்கி ஆவணங்களை தயாரித்து ரூ.5 கோடி மோசடி செய்த இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) கைது செய்துள்ளனர்.

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து 120 மில்லியன் மோசடி செய்துள்ளனர். 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகளான சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து 24 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி இலங்கையரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.