ட்விட்டரில் டொனால்ட் டிரம்பை மீண்டும் சேர்க்கலாமா; எலோன் மஸ்க் வாக்கெடுப்பு!

0
324

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் (Donald Trump) டுவிட்டர் கணக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டொனால்டு டிரம்பின் (Donald Trump) கணக்கு முடக்கப்பட்டது.

தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் (Elon Musk) வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு (Donald Trump) மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது.

டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா; எலான் மஸ்க் வாக்கெடுப்பு! | Can Donald Trump Reinstated Twitter Elon Musk Poll

இதனையடுத்து, டொனால்டு டிரம்பை (Donald Trump) டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் (Elon Musk) டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், எலான் மஸ்க் (Elon Musk) நடத்திய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்பை (Donald Trump) சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் (Donald Trump) டுவிட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் (Elon Musk) நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.