சட்டமூலம் மீதான விவாதத்தில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து!

0
309

அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்காகப் பிணை விண்ணங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே செய்வதாக இருக்கக் கூடாது.

மாகாண மேல் நீதிமன்றத்தின் ஊடாகவும் அதற்கான வழிகள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இல்லையென்றால் அது நீதியை மறுப்பதாகவும், அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரானதாகவும் அமையும் என்று சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சபையில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து! | Sumandran S Comment In The Council

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அபாயகரமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பார்க்கும் போது, இவர்களுக்கு வழங்கப்படும் பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே வழங்கப்படுகின்றது.

நீதியை அணுகி அதனைப் பெற்றுக்கொள்வதற்கான முறையே இது. மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் கொழும்பிலேயே உள்ளன. மேல்நீதிமன்றம் மாகாணங்களில் உள்ளன.