நயன்தாரா இரட்டைக் குழந்தை விஷயத்தில் மாபெரும் தியாகி விக்னேஷ் சிவன்… விமர்சித்த அரசியல் பிரபலம்…

0
534

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றனர்.

நயன்தாரா இரட்டை குழந்தை விசயத்தில் விக்னேஷ் சிவன் மாபெரும் தியாகி.. விமர்சித்த அரசியல் பிரபலம்.. | Vp Duraisamy About Nayanthara Surrogacy Childs

நயன் தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை

இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு சர்ச்சையாகியது. இதுகுறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர். தம்பதிகள் மீது எந்த தவறும் இல்லை தகுந்த அறிவுரைப்படி விதிமீறாமல் குழந்தையை பெற்றுக்கொண்டனர். ஆனால் மருத்துவமனை மீது தான் தவறு என்று அந்த விசாரணை குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரத்தில் சுகாதார துறை அமைச்சர் செய்ததை பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் துரைசாமி. கோவை குண்டுவெடிப்பு குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தாமல் நயன் தாரா 4 மாதத்தில் இரட்டை குழந்தை பெற்றது எப்படி? என்று தனிக்குழு அமைத்திருக்கிறார் அமைச்சர்.

மாபெரும் தியாகி

நயன் தாராவுக்கு எத்தனை கொழுந்தை பிறந்தால் நமக்கென்ன என்றும் நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி என்றும் விமர்சித்து பேசியிருக்கிறார். குழந்தை பிறந்தது குறித்து அவர் அமைதியாக இருக்கிறார். நயன் தாரா குழந்தை மீது இருக்கிற அக்கரை தமிழ்நாட்டு அரசுக்கு கோவை குண்டு சம்பவம் குறித்து அக்கரை இல்லை. விக்னேஷ் சிவன் நம்ம லால்குடி ஏரியா தான் நம்ம ஏரியா பையன் தான் போல அவர்மீது பொறாமை இல்லை நன்றாக இருக்கட்டும் என்று பேசியிருந்தார்.