கழிவறை இருக்கையை கழுத்தில் அணிந்த சிறுமி; உதவிக்கு வந்த தீயணைப்பாளர்கள்!

0
508

விதவிதமான ஆடைகள், நகைகள் ஆகியவற்றை அணிந்துகொள்ள ஆசைப்படுவது வழக்கம்.

ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமிக்கு வினோதமான ஒன்றை அணிய ஆசை வந்துள்ளது.

தனது கழிவறைப் பயிற்சி இருக்கையைக் கழுத்தில் அணிந்துகொண்டு “அம்மா! நான் மாட்டிக்கொண்டேன்!” என்ற அழுகுரல் கேட்டதும் கே ஸ்டீவர்ட் (Kay Stewart) ஓடிச்சென்று பார்த்தார்.

2 வயது மகள் ஹார்பரின் கழுத்தில் கழிவறை இருக்கை இருந்த நிலையில் அதை எப்படி அகற்றுவது என்று ஒரே குழப்பம்.

ஹார்பரின் சகோதரி உதவிக்குத் தீயணைப்பாளர்களை அழைத்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அழைத்த ஒருசில நிமிடங்களிலேயே வந்த அவர்கள் ஹார்பரை இருக்கையிலிருந்து விடுவித்தனர்.  


https://www.taatastransport.com/