ஜீவா இந்தளவிற்கு எளிமையானவரா!

0
194

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜீவா. இவரது அப்பா ஆர்.பி. சவுத்ரி ஒரு பெரிய திரைப்படத் தயாரிப்பாளர். அப்பா ராஜஸ்தானை சேர்ந்தவர். எனினும் அவரது அம்மா தமிழ் தான். 

ஜீவாவின் அப்பா சினிமாவில் இருக்கிறார் என்பதால் ஜீவாவுக்கு முதலாவது பட வாய்ப்பு எளிதில் கிடைத்து இருக்கலாம். ஆனால் அவர் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்க காரணம் அவரது நடிப்பு மட்டும் தான். 

எது எவ்வாறாயினும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் படங்களைக் கொடுக்க முடியாமல் மல்டிஸ்டார் படங்களில் தான் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீவா செய்த ஒரு விடயமானது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது பிரபல நடிகர் – நடிகைகளின் வாரிசுகளை பொறுத்தவரையில் அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள வெளிநாட்டு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். ஆனால் ஜீவாவோ எவ்வளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் தன் பிள்ளையை வீட்டருகில் உள்ள சாதாரண பள்ளியில் சேர்த்துள்ளார்.

இதற்கான காரணம் என்னவெனில் மிகவும் உயர்தரப் பள்ளியில் படித்தால் சாதாரண மக்களின் வாழ்க்கை என்ன என்று தன் பிள்ளைக்கு தெரியாமல் போய்விடும் என்பதால்தான் மகனை வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார் என்கிறார்கள் ஜீவாவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள்.