லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவிலியிலிருந்து அகற்ற வேண்டும்; கன்சர்வேட்டிவ் கட்சி

0
559

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் ட்ரஸ்ஸை (Liz Truss) பிரதமராக தேர்வு செய்தனர்.

ஆனால், அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானியா பொருளாதாரத்தில் தடுமாற, அதை எதிர்கொள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவை தடுமாறி வருகிறது.

இந்நிலையில், லிஸ் ட்ரஸ்ஸை (Liz Truss) பிரதமர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்கத் துவங்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸ்(Liz Truss) மீது நம்பிக்கை இல்லை எனக் கூறும் கடிதங்களை கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டித் தலைவரிடம் கையளிக்க தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவிக்கு ஆபத்து! | British Prime Minister Liz Truss Position Danger

இந்த வாரத்தில் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவிலியிலிருந்து அகற்றவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவிக்கு ஆபத்து! | British Prime Minister Liz Truss Position Danger

ஒருவேளை லிஸ் ட்ரஸ்ஸை (Liz Truss)  பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால், அது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று கூறி வாதம் முன்வைத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டித் தலைவரான Graham Brady, லிஸ் ட்ரஸ்ஸுக்கும் (Liz Truss) , புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெரமி ஹண்டுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம் என கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.