பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த ரஷ்யா!

0
636

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவமான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளக்கங்களுக்கு கடந்த மார்ச் மாதம் ரஷ்யா தடை விதித்திருந்தது.

இந்நிலையில் யுக்ரைனுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையின் போது ரஷ்யாவுக்கு எதிரான தீவிரவாத கருத்துக்களை மெட்டா நிறுவனம் சகித்துக் கொள்வதாக குற்றம் சுமத்தி இத்தடையை ரஷ்யா விதித்தது.

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு மரணம் போன்ற வசனங்களi மெட்டா அனுமதிக்கும் எனவும் ஆனால் பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அனுமதிக்கப்பட மாட்டா எனவும் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மெட்டா நிறுவனம் தெரிவித்திருந்தது.

பின்னர் இம்மாற்றம் யுக்ரைனுக்குள் உள்ளவர்களுக்கு மாத்திரமே பொருந்தம் என மெட்டா கூறியது.

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத பட்டியலில் இணைத்த ரஷ்யா! | Russia Added Facebook S Meta Company To The Terror

கடந்த மார்ச் மாதத்திலிருந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு ரஷ்யா தடை விதித்துள்ள போதலும், விபிஎன் மூலம் அவற்றை பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்புக முகவரகமான ரொஸ்பின்மொனிட்டரிங் நிறுவனம் (Rosfinmonitoring) பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தையும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் பட்டியலில் (terrorist and extremist’ groups) சேர்த்துள்ளது.